Flash News

துபையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - உரை: முஷ்த்ரீ பானு (லெப்பைகுடிகாடு), தலைப்பு : ஏகத்துவம்,நாள்: 25/05/2013(மக்ரிப் தொழுகைக்குப் பின்பு), இடம்: Damascus Road, Dubai Oasis Residential - Opposite: Yummy Restaurant - 1st Floor, Al Qusais தொடர்புக்கு...055-3873002,055-4481405,0508486296

31 July 2011

துபை TNTJ: அனாதை இல்லத்திற்கு ரூபாய் 6100/ நிதியுதவி!


துபை: நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கப் பணிகளோடு சமுதாயப் பணிகளையும் செய்து வருகிறது. அந்தப் பணிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக துருக்கியைச் (TURKY) சார்ந்த சகோதரர் (ABDULLAH MELER) என்பவர் நமது ஜமாஅத் நடத்தக் கூடிய அனாதை இல்லத்திற்கு அவரது கடையில் உண்டியல் மூலம் சேகரித்த ரூபாய் 6100/- வழங்கினார்கள்.

ஹோர் அல் அன்ஸ் கிளையில் சொற்பொழிவு!

ஹோர் அல் அன்ஸ்: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 29.07.2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு துபை ஹோர் அல் அன்ஸ் போஸ்ட் ஆஃபீஸ் பள்ளியின் எதிரில் அமைந்திருக்கும் TNTJ மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும் சகோ.அப்துல் மஜீது உமரி அவர்கள் “ரமலானை வரவேற்போம்” என்ற தலைப்பில் மிகச் சிறப்பான சொற்பொழிவை வழங்கினார்கள்..

அல்கூஸ் கிளையில் திரு குர்ஆன் கலந்தாய்வு வகுப்பு!


அல்கூஸ்:  அல்லாஹுவின் கிருபையால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 29.07.2011 அன்று துபை TNTJ கிளையான அல் கூஸ் கிளை சார்பாக E T A  MELCO கேம்பில் வாரந்திர "திரு குர்ஆன் விளக்க  கலந்தாய்வு" நடைப்பெற்றது. 

அல்கூஸ் அஸ்கான் கேம்பில் திரு குர்ஆன் வகுப்பு!

அல் கூஸ்: அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 29.07.2011 அன்று துபை TNTJ கிளையான அல் கூஸ் கிளை சார்பாக  E T A அஸ்கான் கேம்பில் வாரந்திர திரு குர்ஆன் விளக்க சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் சகோ: நஸ்ருதீன் அவர்கள்  உரையாற்றினார்கள்..


இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

30 July 2011

மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்!


மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள ”மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு” சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.

கலவரத்தை தடுக்க மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை ஒரு மாநில முதல்வர் எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் சொல்லும் காரணங்கள் ஏற்கதக்க வகையில் இல்லை.

இந்த சட்டம் ஏதோ அவசரகோலத்தில் உறுவாக்கப்பட்ட சட்டம் அல்ல, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரங்களில் சிறுபாண்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்க படவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படவில்லை என அரசால் நியமிக்கப்பட்ட பல கமிஷன்கள் கூறியுள்ளன..

தலைமை மர்கசில் நடைப்பெற்ற வாராந்திர சொற்பொழிவு!

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமை மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 29.07.2011 அன்று நடைப்பெற்றது.   இதில் தாயகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் மெளலவி.தாவூத் கைஸர் MISC அவர்கள் "ரமாளனில்..." என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...

TNTJ துபை மண்டல செயற்குழு!

தேய்ரா: இறைவனது கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல செயற்குழு 28.07.2011 அன்று மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாசிர் MISC அவர்களின் தலைமையில் தேய்ரா தலைமை மர்கசில் நடைப்பெற்றது. இரவு 9.30 மணியளவில் ஆரபிக்கப்பட்ட செயற்குழுவில் முதலில் நிர்வாகிகளின் அறிமுகம் நடைப்பெற்றது. பின்னர் அகர வரிசை அடிப்படையில் கிளைகளின் செயல்பாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது... 

ரமளானை வரவேற்போம்

மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...

 இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)

மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


 யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.     (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37)

ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.

 இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க  திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் ரமளான்..



28 July 2011

தலைமை மர்கஸ்: வாராந்திர பயான்!

ஹோர் அல் அன்ஸ் கிளை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி!


மாநிலத் தலைமை நடத்திய ஒரு நாள் இரத்ததான முகாம் பயிற்சி பட்டறை!


இறைவனின் மாபெரும் கிருபையால் கடந்த 6 ஆண்டுகளாக இரத்ததான சேவையில் முன்னிலை வகித்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த வருடத்தில் தமிழகம் முழுவதும் 120 க்கும் அதிகமான இரத்ததான முகாம்களை நடத்தியது. அதிலே கலந்து கொண்டுகிட்டத்தட்ட ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அதிலே இரத்தம் கொடுத்து தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!

27 July 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 04)


ஜிஹாத் என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல்,வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி மற்றும் சத்தியத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணி ஆகிய அர்த்தங்கள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் சான்றுகளுடன் இதுவரை பார்த்தோம். 

மேலும் என்னென்ன நற்செயல்களுக்கு "ஜிஹாத்' என்ற வார்த்தை பொருந்தும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஹஜ் செய்வதும் ஜிஹாத்

அல்லாஹ்வின் தூதரே!  நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?'' என்று நான் கேட்டேன்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் ஆகும்'' என்றார்கள்.  நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),  நூல் : புகாரி 1861, 1520, 2784

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸின் மூலம் இறைவனால் ஒப்புக் கொள்ளப்படும் ஹஜ்ஜை நிறைவேற்றுவது சிறந்த ஜிஹாத் என்பதை விளங்க முடிகிறது.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் ஜிஹாத்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார்.  நபி (ஸல்) அவர்கள், "உன் தாயும் தந்தையும் உயிருடன் இருக்கின்றார்களா?'' என்று கேட்டார்கள்.  அதற்கு அம்மனிதர், "ஆம்'' என்று பதிலளித்தார்.  "அப்படியென்றால் அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),  நூல் : புகாரி 3004,5972

பர்துபையில் பெண்கள் பயான்!


26 July 2011

ஹோர் அல் அன்ஸ் கிளையில் நடைப்பெற்ற தர்பியா மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி!


இறைவனின் கிருபையால் கடந்த 22.07.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல கிளையான ஹோர் அல் அன்ஸ்  கிளை சார்பில் தர்பியா மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும் TNTJ  மாநில அழைப்பாளர் சகோ.தாவூத் கைஸர் MISC  அவர்களால் போஸ்ட் ஆஃபீஸ் பள்ளிவாயிலுக்கு எதிரில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் வைத்து நடைபெற்றது..

25 July 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 03)


"ஜிஹாத்' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்பது மட்டும் பொருளல்ல!  அது பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தை என்பதைப் பார்த்து வருகின்றோம்.  ஜிஹாத் என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி, அழைப்புப் பணி ஆகிய பொருள்கள் உள்ளன என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களைக் கடந்த தொடர்களி்ல் கண்டோம்.

அழைப்புப் பணி செய்வதும் "ஜிஹாத்' தான் என்பதை வலியுறுத்தும் மேலும் பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன..

24 July 2011

துபையில் TNTJ நடத்திய மாபெரும் இரத்தான முகாம்!


துபை: மார்க்கப் பணிகளோடு சமுதாயப் பணிகளையும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபையில் கடந்த 22-07-2011 வெள்ளி அன்று அல்-வஸல் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் "இரத்ததான முகாமை" நடத்தியது.இம்முகாமிற்கு மண்டல தலைவர் முஹம்மது நாசிர் MISC அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்...

காலை 8.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணி வரை நடந்த இம்முகாமில் 142 சகோதரர்கள் குருதி அளித்தனர்.இதில் அல்கூஸ்,ஜபல் அலி,சத்வா,சோனாப்பூர்,ஹோர் அல் அன்ஸ்,கிஸைஸ்,தேரா ஆகிய கிளையிலிருந்து பல சகோதரர்கள் கலந்து கொண்டனர். இம்முகாம் காலை 8.00 மணிக்குதான் ஆரம்பித்தாலும் 7.30 மணிக்கே கிளைகளிலிருந்து பல சகோதரர்கள்  மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.இம்முகாமில் மாற்றுமத சகோதரர்களும் கலந்து கொண்டது நாம் செய்யும் சமுதாய பணிக்கு மற்ற மதத்தினரிடம் நம் ஜமாஅத்திற்குள்ள நன்மதிப்பிற்கு ஒரு சான்றாக அமைந்தது.


23 July 2011

சொர்க்கத்தில் ஒரு வசந்த மாளிகை!


ஒவ்வொரு விஷயத்திலும் நேர்வழியை இனங்காட்டி வளமான அறிவுறுத்தலோடு வழிநடத்திப் பாதுகாக்கும் மகத்தான கருணையாளன் 

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும்.  இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீறமாட்டான் (அல்குர்ஆன்: 39:20)

முஸ்லீம்களின் பார்வையில் இவ்வுலகம் விரைவில் அழியக் கூடியதும் நிலையில்லாததுமாகும். ஒவ்வொரு முஸ்லீமும் இந்த உலகை, உலக வாழ்க்கையை இவ்வாறே மதீப்பீடு செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதரும் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

நிலையில்லா இவ்வுலகில் மனிதர்கள் பல்வேறு ஆசை களுடனும் கனவுகளுடனும் வாழ்கிறார்கள். பலர் தங்கள் ஆசையை அடைவதற்காக வெறும் முயற்சிகளை மேற்கொள்ளவும் செய்கிறார்கள்...

அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் விரும்பும் ஆசைகளுள் நமக்கென ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்பதும் ஒன்று என்பதை நாம் நன்கறிவோம்...

தலைமை மர்கசில் நடைப்பெற்ற வாராந்திர பயான்!

தேய்ரா: இறைவனின் கிருப்பையால் 22.07.2011அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமை மர்கசில் இனை செயலாளர் சகோ.முஹம்மது இபுராஹிம் அவர்கள் "சொர்க்கம் செல்வதற்க்கான தகுதிகள்" என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்...

21 July 2011

தலைமையகத்தில் PRESS MEET: உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!


தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள், தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்.
பொதுவாக மஹதிகளைப் பொருத்தவரை ஒரு குணம் உண்டு. இவர்களை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களை அந்த ஊரில் உள்ள ஒரு தனிப்பள்ளிவாசலில் கட்டி வைத்து சித்ரவதை செய்வார்கள். முழுக்க முழுக்க இவர்கள் தங்களை ஒரு தனிப்பிரிவாகவே நினைத்துக் கொண்டு இஸ்லாம் காட்டித் தராத ஒரு தனி வாழ்க்கையை வாழ்கின்றனர்..
video

இந்திய அரசியலின் இரண்டாவது ஆண்மகனா?

இந்திய அரசியலின் இரண்டாவது ஆண்மகனா? என்று சொல்லும் அளவிற்க்கு தனது கருத்தை மிகத் துனிச்சலாக வெளியிட்டு வருகிறார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளார் திக்விஜய் சிங்.  இந்தியாவில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் இஸ்லாமிய தீவீரவாதிகள் தான் காரணம் என்று பத்திரிக்கைகளும் செய்திதுறையும் சொல்லிவருவதை நாம் அறிவோம் அதற்க்கு ஏற்றாற் போல் காவல்துறையும் அடுத்த மறுவிநாடியே ஒரு முஸ்லீம் இளைஞனை கைது செய்து ஏதாவது வாயில் வந்த பெயரை போட்டு விடுவார்கள்.. 

20 July 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு. (தொடர் - 02)



"ஜிஹாத்" என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல் என்ற பொருளும், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற பொருளும் உள்ளது என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களை சென்ற இதழில் கண்டோம்.  மேலும் பல அர்த்தங்களை உள்ளடக்கிய வசனங்களைக் காண்போம்.    ஜிஹாத் என்பதற்கு உறுதி என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.  அது சம்பந்தமான வசனங்களைக் காண்போம்..


17 July 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 01)



(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.S.C )


ஜிஹாத் - இந்த சொல்லைக் கேட்டாலே ஒரு சாரார் வெறுப்பின் உச்சத்திற்குச் செல்வதையும் மற்றொரு சாரார் உணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்று விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, தங்களையும் தங்கள் சமுதாயத்தையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதையும் காண முடிகின்றது.

ஜிஹாதைப் பற்றி மேற்கண்ட இரு சாராரும் கொண்டுள்ள கருத்துக்கள் சரியானவை தாமா? இறுதி வேதமான திருமறைக் குர்ஆனும் இறுதித் தூதராகிய பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையும் ஜிஹாத் சம்பந்தமாக என்ன விளக்கமளிக்கின்றன?  ஓர் உண்மை முஸ்லிம் ஜிஹாத் பற்றி எப்படிப் புரிந்து நடக்க வேண்டும்? என்பதை விளக்குவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு தான் "ஜிஹாத் - ஓர் ஆய்வு'...

16 July 2011

நித்தியானந்தாவுக்கு பட்டுக்கம்பளமா? TNTJ கடும் கண்டனம்!


போலிச்சாமியார் நித்தியானந்தாவுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கும் தமிழக காவல்துறையைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் வெளியிடும் கண்டன அறிக்கை:
இந்து மக்களால் இளைய விவேகானந்தராகக் கருதப்பட்ட நித்தியானந்தா எனும் போலிச் சாமியார் தனது காமக்களியாட்டத்தினால் இந்துக்களின் கடும் கோபத்துக்கு உள்ளானார். இத்தகைய கேவலமான போலிச்சாமியாருக்கு தமிழகக் காவல்துறை பட்டுக் கம்பளம் விரித்ததன் மூலம் தன்மீது தானே காரித்துப்பிக் கொண்டது.
மக்களால் மதிக்கப்படும் ஒருவர் கேவலமான செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்தால் அதை வெளியிடுவதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது ஊடகங்களின் கடமையாகும். போலிச்சாமியாரின் லீலைகளை அம்பலப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளிக்கும் புகாரை தமிழகக் காவல்துறை பெற்றுக் கொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஊடகங்களின் உரிமையைப் பறிப்பதுமாகும்.
இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று நித்தியானந்தா கூறுவதை காவல் துறையினர் நம்பினால் அவர்கள் மாடுமேய்க்கத் தான் தகுதியானவர்களே தவிர காவல்பணிக்கு தகுதியானவர்கள் அல்ல. இது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்று நித்தியானந்தா கூறுவதை காவல்துறை நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது.

சத்வாவில் நடைப்பெற்ற "இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்"!!

சத்வா: இறைவனது மாபெரும் கிருபையால் 15.07.2011 அன்று சத்வா மர்கஸ் வளாகத்தில் சத்வா மற்றும் பர்துபை கிளைகள் இனைந்து நடத்திய "இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோ.தாவூத் கைசர் MISC அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்...



தலைமை மர்கசில் நடைப்பெற்ற மார்க்க சொற்பொழிவு கூட்டம்!

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபை மண்டல தலைமை மர்கசில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு கூட்டத்தில் நேற்று 15.07.2011 அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ.ஹாமீன் இபுராஹிம் அவர்கள் "உலகமும் தவ்ஹீத்வாதிகளும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

13 July 2011

இணை கற்பிக்கும் இமாமை எப்படி கண்டு பிடிப்பது?


இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று எழுதியுள்ளீர்கள். நமது சொந்த ஊரில் அல்லது அதிக காலம் தங்கியுள்ள ஊரில் ஒரு இமாம் இணை கற்பிக்கிறாரா? இல்லையா என்பதைக் கண்டு பிடித்து அவர்களைப் பின்பற்றாமல் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால் வெளியூர் செல்லும் போது இதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அப்போது நாம் இணை கற்பிக்காத இமாமை எப்படி அறிந்து கொள்ள முடியும்? ஜும்மா தொழுகையை எப்படி நிறைவேற்றுவது? - நியாஸ் அஹ்மத்.

இஸ்லாத்தின் எல்லாச் சட்டங்களுமே வெளிப்படையாக தெரியும் போது தான் அமுல்படுத்தத் தக்கதாகும். ஒருவர் இணை கற்பிப்பவர் என்பது நமக்குத் தெரிய வந்தால் அபோது அவரைப் பின்பற்றாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நமக்குத் தெரியாவிட்டால் முஸ்லிம் இணை கற்பிக்க மாட்டார் என்று நல்லெண்ணம் வைக்க வேண்டும். வெளிப்படையாகத் தெரியாத வரை எவரைப் பற்றியும் தப்பான எண்ணம் கொள்ளக் கூடாது என்பது தான் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தரும் வழியாகும்..

12 July 2011

அவ்லியாக்களின் சிறப்புகளும், தரீக்காக்களும்!

(இந்தக் கட்டுரை, சகோதரர் பி.ஜே. அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு தாம் ஆசிரியராக இருந்த ஒரு மாத இதழில் எழுதிய கட்டுரையாகும்.)

புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)

ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் போதிக்கிறோம்..

11 July 2011

ஜபல் அலி கிளையில் நடைபெற்ற மருத்துவ விளக்க முகாம்!


 ஜபல் அலி: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல கிளையான ஜபல் அலி கிளையில் 08.07.2011அன்று "இருதய நோய் தொடர்பான மருத்துவ விளக்க ஆலோசனை முகாம்" நடைபெற்றது. இதில் சகோ.சாதிக் அவர்கள் இருதய நோய் தொடர்பான மருத்துவ விளக்கங்களை அளித்தார்கள். 

03 July 2011

இலங்கை முஸ்லீம்களின் பிரச்சினையை ஊறுகாயாக்க வேண்டாம்!

தமிழக அமைப்புக்களுக்கு ஓர் வேண்டுகோள்


சிறுபான்மையின மக்களாக இலங்கையில் மதிக்கப்படும் சமுதாயங்களில் இலங்கைச் சோனகர்கள் என்று அழைக்கப்படும் முஸ்லீம்கள் மிக முக்கியமானவர்கள்.

இலங்கை வரலாற்றில் நாட்டை மதித்து நாட்டின் இறையான்மையைப் பாதுகாப்பதற்காக போராடிய பல தலைவர்களை இலங்கைச் சொனகர்களான இஸ்லாமிய சமுதாயம் பெற்றுக் கொடுத்துள்ளது.

ஆங்கிலேய எதிர்ப்புப் பிரச்சாரம் தொடங்கி தமிழீலத்தின் பெயரால் தீவிரவாதம் செய்து வந்த புலி எதிர்ப்புப் பிரச்சாரம் வரை நாட்டின் இறையான்மையைப் பாதுகாப்பதில் முஸ்லீம்கள் என்றும் பின் நின்றதில்லை.

கல்வித் துறைக்கு புத்துயிர் ஊட்டிய டி.பி. ஜாயா, அறிஞர் சித்தி லெப்பை, போன்றவர்களில் தொடங்கி அமைச்சர் அஷ்ரப் வரை அரசியல் ரீதியாகக் கூட இலங்கை முஸ்லீம்கள் அனைத்து சமுதாயத்தவர்களுடனும் நல்லுறவைப் பேணி வந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

என்றைக்கு விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பிரபாகரனின் தலைமையிலான தீவிரவாதம் இலங்கையில் ஆரம்பமானதோ அன்றைக்கே முஸ்லீம்களின் உரிமைப் பரிப்பு நிலைபாட்டையும் விடுதலைப் புலிகள் தங்கள் கொள்கையாக போட்டுக் கொண்டார்கள்.

பொலன்னறுவைப் படுகொலையில் ஆரம்பித்த முஸ்லீம் கறுவருப்பு பிரச்சாரம், காத்தான் குடி படுகொலையைத் தாண்டியும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

மறக்க முடியாத வடக்கு வெளியேற்றம்.

1992 ம் ஆண்டு எந்த ஒரு இலங்கை பிரஜையும் மறக்க முடியாத, மறக்கக் கூடாத ஒரு நிகழ்வை விடுதலைப் புலிகள் நிகழ்த்தினார்கள்.

அதுதான் வடக்கின் மைந்தர்களான முஸ்லீம்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப் பட்ட அகோர நிகழ்வு நடந்த ஆண்டு.

உடுத்த உடையுடன், சல்லிக் காசின்றி, நடை பயணிகளாக பிறந்த மண்ணிலிருந்து துரத்தப் பட்டார்கள் வடக்கு முஸலீம்கள்.

இலங்கையின் ஜப்பான் என்று வர்ணிக்கும் அளவுக்கு செல்வச் செழிப்போடும், வருமான உச்சத்துடனும் வாழ்ந்த வடக்கு முஸ்லீம்களின் வருமானம் பரிக்கப்பட்டு, வீடு வாசல்களை இழந்து, திக்கற்றவர்களான விடப்பட்டார்கள். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய்ப் பழகிய தங்கள் தாய் மொழிச் சமுதாயத்தை ஈவு இறக்கமின்றி வெளியேற்றினார்கள் தீவிரவாத புலிகள்.

அன்று பாராளுமன்றத்தில் இதற்காக குரல் கொடுப்பதற்கு சொற்பமான முஸ்லீம் அரசியல் வாதிகளே காணப்பட்டார்கள்.

அரசாங்கத்தின் கையாளாகாத் தன்மையும் அப்போது உச்சத்தில் இருந்ததினால் அரசாங்கம் கூட புலிகளுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று கைவிரிக்கும் நிலை உருவானது. அன்று புத்தளம் மாவட்டத்தில் குடியேறிய முஸ்லீம்கள் அகதி அந்தஸ்துடன் சுமார் 18 வருடங்களை முகாம்களில் கழித்தார்கள் வடக்கு முஸ்லீம்கள்...

அல்கூஸ் கிளையில் நடைப்பெற்ற திருகுர்ஆன் விளக்க சொற்பொழிவு!


அல்கூஸ்: அல்லாஹுவின் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை 01.07.2011 அன்று அல் கூஸ் கிளை சார்பாக  E T A அஸ்கான் கேம்பில்  மக்ரிப் தொழுகைக்கு பின்பு  வாரந்திர "திருகுர்ஆன் விளக்க சொற்பொழிவு" நடைப்பெற்றது. இதில் சகோ.நஸ்ருதீன் அவர்கள்  உரையாற்றினார்கள்...


இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்!!