Flash News

துபையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - நாள்: 25/05/2013;மக்ரிப் தொழுகைக்கு பின்பு; இடம்: Damascus Road, Dubai Oasis Residential - Opposite Yummy Restaurant - 1st Floor, Al Qusais தொடர்புக்கு...055-3873002,055-4481405,0508486296

07 July 2012

துபையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் துவக்கம் & நிர்வாகிகள் தேர்வு!

துபை: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெளிநாடுகளில் முதல் முறையாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு துபை மண்டலத்தில் அதிகாரபூர்வ கிளை ஆரபிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

இதன் ஒருங்கினைப்பு கூட்டம் கடந்த 06.07.2012 அன்று  மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை துபை TNTJ தலைமை மர்கசில்  அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ.ஹாமீன் இபுராஹிம் அவர்களின் தலைமையிலும்,  மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC மற்றும் செயலாளர் சகோ.அபுதாஹிர் ஆகியோரின் முன்னிலையிலும் நடைப்பெற்றது. 




முதலில் தலைமையுரையாற்றிய அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ.ஹாமீன் இபுராஹிம் ஒரு குடையின் கீழ் செயல்படுவத்தின் நன்மைகளையும், அவசியத்தை எடுத்துரைத்தார்.



பின்னர் ஆன்லைன் மூலம் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் ஸ் SLTJ-வின் தஃவா மற்றும் சமுதாய செயல்பாடுகளை விரிவாக விவரித்தனர்.

இதனை தொடர்ந்து நிர்வாக தேர்வு நடைப்பெற்றது. 

இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டணர்:-

தலைவர்:   ரம்ஜான்  - 050 5845443


துனை தலைவர்: ஹீசைன் ஸலஃபி - 050 8526424


செயலாளர்: முஹம்மது அஜ்மல் - 050 4982103


துனை செயலாளர்: முஹம்மது நலீம் - 055 2309540


பொருளாளர்: முஹம்மது சுபீஃர் - 055 7459219


இனை செயலாளர்கள் : 


முஹம்மது சஃப்ராஸ் - 055 8251306


முஹம்மது ஹாஜி - 052 9728545

தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் ஆன்லைன் மூலம் SLTJ நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்து கொண்டனர்.

இந்த ஒருங்கினைப்பு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தாயகத்தில் (ஸ்ரீலங்கா) நடைபெறும் அனைத்து தஃவா மற்றும் சமுதாய பணிகளுக்கு உறுதுனையாக இருப்பது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்துடன் ஒருங்கினைந்து செயல்படுத்துவது.


இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதத்தில் தாயகத்திலிருந்து (ஸ்ரீலங்கா) தாயியை வரவைத்து மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஸ்ரீலங்காவை சார்ந்த  ஏரளமான கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


இவர்களின் பணி சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.

எல்லாம் புகழும் நம்மை படைத்த வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனுக்கே!

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்