Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

14 December 2013

துபை TNTJ நடத்திய மாபெரும் “இரத்த தான” முகாம்!

துபை: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் மற்றும் லத்திஃபா மருத்துவமனை இனைந்து நடத்திய ”மாபெரும் இரத்ததான முகாம்” சென்ற 13.12.2013 அன்று மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி தலைமையிலும், முகாம் பொறுப்பாளர் சகோ.அஷ்ரப் அவர்களின் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

அல்லாஹுவின் உதவியால் இரத்ததானத்தில் தொடர்ந்து தமிழகத்தில்  9 வருடங்களாக முதலிடம் பெற்று வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா நாடுகளிலும் இரத்தானத்தில் சாதனை படைத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

காலை 8.30 மணிக்கு இரத்த‌தான முகாம் ஆரம்பம் என்றாலும் அதற்கு முன்பே பல சகோதரர்கள் வந்து காத்திருந்தனர்.  நேரம் செல்லச்செல்ல சகோதரர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

இம்முறை மருத்துவமனை மற்றும் பேருந்துகளிலும் இரத்த தானம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளை லத்திஃபா மருத்துவமனை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது.

196 சகோதரர்கள் கலந்து கொண்டு 177 சகோதரர்கள் குருதி கொடையளித்தனர். அமீரக வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை நபர்கள் குருதி கொடையளித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. 

இதில் இந்து, கிருத்துவ சகோதரர்களும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தது தனி சிறப்பு. 

மண்டல பொருளாளர் இணைச் செயலாளர் சகோ.நவாஸ் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பான முறையில் கள பணியாற்றினர்.

இதில் தேய்ரா, சோனாப்பூர், அல்கூஸ், ஜபல் அலி, சத்வா, ஹோர் அல் அன்ஸ், பர்துபை,  கிஸஸ் ஆகிய பகுதியிலிருந்து சகோதரர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

எல்லாம் புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!

”ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லாம் மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்” (அல் குர்ஆன் 5:32)









0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்