Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

14 January 2014

சங்பரிவாரத்தினர் ஆம் ஆத்மி அலுவலகத்தைத் தாக்கியதன் பின்னனி என்ன?

ஆம் ஆத்மி எழுச்சியால் பாஜக கதிகலங்கிப் போய் உள்ளதன் வெளிப்பாடுதான் இந்தத் தாக்குதல்.

ஆம் ஆத்மியால் எங்களுக்குப் பாதிப்பு இல்லை என்று பாஜகவும் காங்கிரசும் அடிக்கடி அறிக்கை விடுவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல்தான் உள்ளது.

திமுகவால் எங்களுக்குப் பாதிப்பு இல்லை; அதிமுகவால் பாதிப்பு இல்லை; இடதுசாரிகளால் பாதிப்பு இல்லை; முலாயம், லல்லு போன்றவர்களால் பாதிப்பு இல்லை என்று இவர்கள் கூறுவதில்லை. யாரால் பாதிப்பு இல்லையோ அவர்களைப் பற்றி இத்தகைய விமர்சனங்களை பாஜக, காங்கிரஸ் கட்சிகள் செய்வதில்லை.

ஆம் ஆத்மியால் பாதிப்பு இல்லை என்று இவர்களின் ஒவ்வொரு தலைவர்களும் தினசரி பத்து தடவையாவது மீடியாவின் முன்னால் பேசுகிறார்கள் என்பதில் இருந்து ஆம் ஆத்மியால் இவர்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்துள்ளனர் என்று நாம் அறியமுடிகின்றது.

பாஜகவுக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகத்தான் பாஜகவின் கைக்கூலி அன்னா ஹசாரே மூலம் ஆம் ஆத்மி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அறிக்கை விடச் செய்தனர். பாஜகவின் மற்றொரு கைக்கூலியான அன்னா ஹாசாரே கும்பலைச் சேர்ந்த கிரன்பேடி மூலம் மோடிதான் பிரதமருக்குத் தகுதியானவர் என்று பிரச்சாரம் செய்ய வைத்துள்ளனர்.

ஆம் ஆத்மியைத் தனிமைப்படுத்த காங்கிரஸ் எடுத்துக்கொண்ட ஆயுதம் ஆம் ஆத்மி முறையான கொள்கையை வகுத்துக் கொள்ளாத ஒரு குழுதான். அது கட்சியோ சங்கமோ அல்ல என்பது தான்.

ஆம் ஆத்மியின் பக்கம் மக்கள் போய் விடக்கூடாது என்பதற்கு பாஜக எடுத்துக் கொண்ட ஒரே  ஆயுதம் தேச விரோதிகளைக் கொண்ட அமைப்பாக ஆம் ஆத்மி உள்ளது என்பதுதான்.

ஆரம்ப காலம் முதல் ஊழலை எதிர்ப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் வழிக்கறிஞர் சாந்தி பூஷனும், அவரது மகன் பிரசாந்த் பூசனும் ஆவார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளே ஊழல் செய்கிறார்கள் என்று ஆதாரத்துடன் உச்ச நீதி மன்றத்தில் அறிக்கை அளித்தவர்கள். அன்னா ஹசாரேவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நீதிபதிகளின் ஊழலை தனி நபர்களாக அம்பலப்படுத்திய நேர்மையாளர்கள்.

அத்துடன் அரசியல் சாசனத்துக்கு எதிரான சங்பரிவாரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஆரம்பம் முதலே எதிர்த்து வரக் கூடியவர்கள். காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருபவர் பிரஷாந்த் பூஷன். இந்தக் கருத்தைச் சொன்னதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நீதி மன்றத்தில் உள்ள அவரது வழக்கறிஞருக்கான அலுவலகத்தில் புகுந்து இரத்தக் காயம் வரும் அளவுக்கு சங்பரிவார ரவுடிகள் அவரைத் தாக்கினார்கள். அவரை அடித்து உதைத்து புரட்டும் வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு காண்போர் நெஞ்சங்களைக் கலங்கச் செய்தது.

அன்று அவருக்குப் பின்புலம் எதுவும் இல்லை. அயோக்கிய காங்கிரஸ் அரசாங்கம் குற்றவாளிகள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வளவு நடந்தும் பிரஷாந்த் பூஷன் ஊழலுக்கு எதிரான தனது உறுதிப்பாட்டிலும் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளிலும் நிலைமாறாமல் இருக்கிறார்.

(இதனால் தான் ஆம் ஆத்மி பற்றிய நிலைப்பாட்டை விளக்கிய கேள்விக்கான பதிலில் இவரைப் பற்றியும் நாம் குறிப்பிட்டு இருந்தோம்)

பிரசாந்த் பூஷன் ஆம் ஆத்மியில் இருப்பதன் காரணமாகத்தான் தேச விரோதிகளுக்கு ஆம் ஆத்மி அடைக்கலம் கொடுக்கும் கட்சி என்ற விமர்சனத்தை பாஜக அடிக்கடி முன்வைத்தது.

காஷ்மீர் குறித்த கருத்தை இப்போதும் பிரஷாந்த் பூசன் உறுதிபடக் கூறினார். இது கட்சியின் கருத்து அல்ல;ஆரம்பம் முதலே பிரசாந்த் பூஷனின் தனிப்பட்ட கருத்து என்று கெஜ்ரிவாலும் உடனடியாக மறுப்பும் தெரிவித்து விட்டார்.

இதன் பின்னர்தான் ஆம் ஆத்மி அலுவலகத்தை சங்பரிவார ரவுடிக் கும்பல் தாக்கியுள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் தேசத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் குருட்டு தேசபக்தி கொண்டவர்கள் ஆம் ஆத்மிக்கு போவதைத் தடுக்கலாம் என்பது தான் பாஜகவின் ஒரே நோக்கமாக இருக்க முடியும்.

கட்சிக்குச் சம்பந்தமில்லை என்று கட்சித் தலைவரே சொன்ன பின் கட்சி அலுவலகத்தை அறிவுடைய யாரும் தாக்கமாட்டார்கள்.

அடுத்ததாக பிரசாந்த் பூஷன் சொன்ன கருத்து ஆம் ஆதிமியின் கருத்தாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நியாய உணர்வு படைத்த அனைவரின் கருத்தும் அதுதான். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கருத்தும் இதுதான். இவ்வாறு கூறுவது தேச விரோதமாக ஆகாது என்பது தான் நமது கருத்தாகும்.

காஷ்மீர் வரலாறும் தேச விடுதலை வரலாறும் கொஞ்சம் தெரிந்திருக்கும் அனைத்து இந்தியர்களின் கருத்தும் இதுதான்.

இந்தியாவை ஒரு நாடாக பிரிட்டிஷார் அறிவித்தார்கள். அவ்வாறு அறிவித்த இந்தியாவில் காஷ்மீர் இருக்கவில்லை.

பாகிஸ்தான் ஒரு நாடாக அறிவித்த போது அவ்வாறு அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானிலும் காஷ்மீர் இருக்கவில்லை.

அது தனிநாடாகத்தான் விடுதலை பெற்றது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மாட்டிகொண்ட காஷ்மீரின் 33 சதவிகிதம் இன்று பாகிஸ்தானில் உள்ளது. 67 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது.

காஷ்மீர் தனது நாட்டின் பகுதி என்று இந்திய அரசு கருதினால் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரை -ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்று இந்திய அரசால் குறிப்பிடப்படும் பகுதியை – மீட்பதற்காக ஏன் பாகிஸ்தானுடன் போரிட்டு மீட்கவில்லை? நமது நாட்டின் ஒரு ஜான் நிலத்தை எந்த நாடு ஆக்ரமித்தாலும் அதை மீட்கும் கடமை அரசுக்கு இருக்கிறதா இல்லையா?

வாஜ்பேயி ஆட்சியில் இருந்தபோதாவது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீரை மீட்க ஏன் போர் செய்யவில்லை?

அதுபோல் காஷ்மீர் எங்களுக்குச் சொந்தம் என்று பாகிஸ்தான் உண்மையில் கருதினால் இந்தியாவால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்கும் கடமை அந்த நாட்டுக்கு உள்ளதல்லவா? எத்தனையோ போர்களை இந்தியாவுக்கு எதிராக நடத்திய பாகிஸ்தான் காஷ்மீர் எங்கள் நாட்டைச் சேர்ந்தது; அதைப் போரிட்டு மீட்கப் போகிறோம் என்று அறிவித்து  போர் தொடுத்து இருக்க வேண்டும்.

இரு நாடுகளுமே தங்கள் பகுதி என்று வாதிட்டாலும் ஏன் போர்ப்பிரகடனம் செய்ய முடியவில்லை? இந்தக் கேள்விக்கு உரிய விடையை அறிந்து கொண்டால் பிரசாந்த் பூஷன் கூறியது முற்றிலும் நியாயமானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

நாடு விடுதலை அடையும் போது ஆங்கிலேயர்களின் கீழ் 562 குட்டி மன்னர்கள் ஆட்சி நடந்தது. இன்றைய இந்தியாவுக்கு உள்ளேயும் பாகிஸ்தானுக்கு உள்ளேயும் அவை இருந்தன.

அந்தக் குட்டி ராஜ்ஜியங்கள் விரும்பினால் தனித்து இயங்கலாம்; அல்லது இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம் என்று ஆங்கிலேயர்கள் முடிவெடுத்து அறிவித்தனர்.

விடுதலை அடைந்த பின் தங்கள் பகுதிக்குள் குட்டி ராஜாக்கள் இருப்பதை விரும்பாத இந்தியாவும் பாகிஸ்தானும் மிரட்டியும்இ தொடர்ந்து மன்னர் மானியம் தருவதாக வாக்குறுதி அளித்தும் குட்டி ராஜ்ஜியங்களை தங்கள் நாட்டுடன் இணைத்தனர்.

இவ்வாறு ராஜ்ஜியத்தை இழந்த ராஜாக்களும் அவர்களின் வாரிசுகளும் கோடிக் கணக்கில் ஆண்டுதோறும் பல சலுகைகளையும் மன்னருக்கான மானியத்தையும் பெற்றுவந்தனர்.

இந்திரா காந்தியின் ஆட்சியில் மன்னர் மானிய ஒழிப்பு சட்டம் கொண்டு வந்து இதை நிறுத்தும் வரை அதிகாரமில்லாத ராஜாக்களாக முன்னால் மன்னர்கள் பவனி வந்தனர்.

இது போன்ற ஒரு பகுதியாகத் தான் இந்தியாவில் உள்ள காஷ்மீரும் பாகிஸ்தானில் உள்ள காஷ்மீரும் இருந்தன.

தங்கள் பகுதிக்குள் இருந்த ராஜாக்களிடமிருந்து அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டது போல காஷ்மீர் விவகாரத்தில் இயலவில்லை. காஷ்மீர் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடுவில் மாட்டிக்கொண்ட இருநாடுகளுமே தங்கள் கட்டுப்பாட்டில் காஷ்மீரைக் கொண்டு வர திட்டமிட்டனர்.

(இணைந்த) காஷ்மீர் மக்களில் சுமார் 90 சதம் முஸ்லிம்களாக உள்ளதால் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்பது பாகிஸ்தான் வாதம்.

காஷ்மீர் மாநிலத்தின் மன்னராக ராஜா ஹரிசிங் இருந்தார். இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இந்து மன்னர் ஆட்சி என்பதால் அதை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்பது இந்தியாவின் நியாயம்.

இது குறித்த முழு விபரங்கள் ழடெinநித.உழஅ ல் பின் வரும் இணைப்பில் தனிக்கட்டுரையாக  இடம் பெற்றுள்ளது.

hவவி:ஃஃறறற.ழடெinநித.உழஅஃயெஎநநயெ-pசையளளயயெமையடஃவாநளலையமழனi_வாநளயியவசரஃ

மேலும் ஏன் போர் தொடரவில்லை என்றால் இது உடனடியாக ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு போகப்பட்டது.

இந்தியாவுடன் சேர்வதா?

பாகிஸ்தானுடன் சேர்வதா?

தனிநாடாக இருப்பதா?

என்று இந்தியாவும் இ பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்  என்ற ஐநாவின் உத்தரவை இந்தியாவும் பாகிஸ்தானும் 1948 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டன. அதனால் தான் காஷ்மீருக்கான போர் நடக்கவில்லை.

இரண்டு நாடுகளுமே வாக்கெடுப்பு இல்லாமல் தத்தமது பகுதிகளை தாமே வைத்துக்கொள்ளலாம் என்று செயல்பட்டு ஐநாவின் முடிவை தொடர்ந்து மீறி வருகின்றனர்.

வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்ன பிரசாந்த் பூஷன் தேசவிரோதி என்றால் நேருவும் பட்டேலும் தான் தேச விரோதிகளாக இருக்க வேண்டும். அவர்கள் ஆட்சியின் போது காஷ்மீர் சுய நிர்ணய உரிமைக்கு ஒப்புக் கொண்டார்கள்.

மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைந்த பின் காஷ்மீரில் இப்போது காணப்படுவதை விட ஆயிரம் மடங்கு கொந்தளிப்பு ஏற்பட்டது.

இன்றைய உமர் அப்துல்லாவின் பாட்டனாரும்இ பாரூக் அப்துல்லாஹ்வின் தந்தையுமான காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சி காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்று கடுமையான போராட்டம் நடத்தியது.

நூறு சதவிகித மக்களும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்பவில்லை என்று உறுதிபடச் சொன்ன கால கட்டம் அது.

பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி ஷேக் அப்துல்லா தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கொடைக்கானலுக்கு கொண்டு வரப்பட்டு சிறைவைக்கப்பட்டார்.

இதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமானது..

காஷ்மீர் மக்களின் மனக்குறையை நீக்குகிறோம் என்று போராளிகளுடன் பேசி பலவிதமான முடிவுகள் எடுத்து அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அது 370ஆவது பிரிவாக அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

இந்த விபரமும் மேறகண்ட தனிக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

அந்த 370ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று இப்போது சங்பரிவாரம், நேரு மற்றும் பட்டேலின் வாக்குறுதியை மீறுகிறது. காஷ்மீர் மக்களுக்கு அளித்த உறுதி மொழிகளை ஒவ்வொன்றாக மீறியும் வருகின்றது.

370ஆவது பிரிவை நீக்கக் கூடாது என்று பிரசாந்த் பூசன் கூறுகிறார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஐநாவில் ஒப்புக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்ற ஒப்புக்கொண்டால் காஷ்மீர் பிரச்சினை ஒரு வாரத்தில் தீரக்கூடிய பிரச்சினைதான்.

இந்தியாவுடன் இருக்கமாட்டோம் என்று ஒருமித்து அவர்கள் முடிவு செய்தால் அத்தகையோர் நமது நாட்டுக்குத் தேவையில்லை.

கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதியினர் பாகிஸ்தானோடு இருக்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து முஜிபுர் ரஹ்மான் என்பவர் தலைமையில் புரட்சி செய்த போது இந்தியாவும் தலையிட்டு பங்களாதேஷ் என்ற தனி நாடாக ஆக்கியது.

பாகிஸ்தானுடன் அம்மக்களும் சேரவிரும்பவில்லை என்றால் தனிநாடாக இருப்பது சரிதான் என்று உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

காஷ்மீர் என்ற பெயரைச் சொல்லி பல ஆயிரம் கோடிகள் வீணடிக்கப்படுகின்றன. உலக அளவில் மனித உரிமை தொடர்பான பல விமர்சனங்களைச் சந்திக்கிறோம்.

உள்நாட்டு மக்களை எத்தனை ஆண்டுகள் இராணுவத்தை வைத்துக் கொண்டு ஆள்வது? என்றெல்லாம் பொறுப்போடு சிந்தித்து ஒரு முடிவு எடுப்பது நல்லது.

பிரசாந்த் பூஷன் சொன்னதும், நேருவும், பட்டேலும் ஒப்புக்கொண்டதும் பாகிஸ்தானும் ஐநாவும் ஏற்றுக்கொண்டதுமான வாக்கெடுப்பு என்ற ஒரே முடிவைத் தவிர இதற்கு நிரந்தரத் தீர்வு ஏதும் இல்லை.ஆம் ஆத்மி எழுச்சியால் பாஜக கதிகலங்கிப் போய் உள்ளதன் வெளிப்பாடுதான் இந்தத் தாக்குதல்.

ஆம் ஆத்மியால் எங்களுக்குப் பாதிப்பு இல்லை என்று பாஜகவும் காங்கிரசும் அடிக்கடி அறிக்கை விடுவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல்தான் உள்ளது.

திமுகவால் எங்களுக்குப் பாதிப்பு இல்லை; அதிமுகவால் பாதிப்பு இல்லை; இடதுசாரிகளால் பாதிப்பு இல்லை; முலாயம்இ லல்லு போன்றவர்களால் பாதிப்பு இல்லை என்று இவர்கள் கூறுவதில்லை. யாரால் பாதிப்பு இல்லையோ அவர்களைப் பற்றி இத்தகைய விமர்சனங்களை பாஜகஇ காங்கிரஸ் கட்சிகள் செய்வதில்லை.

ஆம் ஆத்மியால் பாதிப்பு இல்லை என்று இவர்களின் ஒவ்வொரு தலைவர்களும் தினசரி பத்து தடவையாவது மீடியாவின் முன்னால் பேசுகிறார்கள் என்பதில் இருந்து ஆம் ஆத்மியால் இவர்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்துள்ளனர் என்று நாம் அறியமுடிகின்றது.

பாஜகவுக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகத்தான் பாஜகவின் கைக்கூலி அன்னா ஹசாரே மூலம் ஆம் ஆத்மி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அறிக்கை விடச் செய்தனர். பாஜகவின் மற்றொரு கைக்கூலியான அன்னா ஹாசாரே கும்பலைச் சேர்ந்த கிரன்பேடி மூலம் மோடிதான் பிரதமருக்குத் தகுதியானவர் என்று பிரச்சாரம் செய்ய வைத்துள்ளனர்.

ஆம் ஆத்மியைத் தனிமைப்படுத்த காங்கிரஸ் எடுத்துக்கொண்ட ஆயுதம் ஆம் ஆத்மி முறையான கொள்கையை வகுத்துக் கொள்ளாத ஒரு குழுதான். அது கட்சியோ சங்கமோ அல்ல என்பது தான்.

ஆம் ஆத்மியின் பக்கம் மக்கள் போய் விடக்கூடாது என்பதற்கு பாஜக எடுத்துக் கொண்ட ஒரே  ஆயுதம் தேச விரோதிகளைக் கொண்ட அமைப்பாக ஆம் ஆத்மி உள்ளது என்பதுதான்.

ஆரம்ப காலம் முதல் ஊழலை எதிர்ப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் வழிக்கறிஞர் சாந்தி பூஷனும், அவரது மகன் பிரசாந்த் பூசனும் ஆவார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளே ஊழல் செய்கிறார்கள் என்று ஆதாரத்துடன் உச்ச நீதி மன்றத்தில் அறிக்கை அளித்தவர்கள். அன்னா ஹசாரேவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நீதிபதிகளின் ஊழலை தனி நபர்களாக அம்பலப்படுத்திய நேர்மையாளர்கள்.

அத்துடன் அரசியல் சாசனத்துக்கு எதிரான சங்பரிவாரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஆரம்பம் முதலே எதிர்த்து வரக் கூடியவர்கள். காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருபவர் பிரஷாந்த் பூஷன். இந்தக் கருத்தைச் சொன்னதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நீதி மன்றத்தில் உள்ள அவரது வழக்கறிஞருக்கான அலுவலகத்தில் புகுந்து இரத்தக் காயம் வரும் அளவுக்கு சங்பரிவார ரவுடிகள் அவரைத் தாக்கினார்கள். அவரை அடித்து உதைத்து புரட்டும் வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு காண்போர் நெஞ்சங்களைக் கலங்கச் செய்தது.

அன்று அவருக்குப் பின்புலம் எதுவும் இல்லை. அயோக்கிய காங்கிரஸ் அரசாங்கம் குற்றவாளிகள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வளவு நடந்தும் பிரஷாந்த் பூஷன் ஊழலுக்கு எதிரான தனது உறுதிப்பாட்டிலும் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளிலும் நிலைமாறாமல் இருக்கிறார்.

(இதனால் தான் ஆம் ஆத்மி பற்றிய நிலைப்பாட்டை விளக்கிய கேள்விக்கான பதிலில் இவரைப் பற்றியும் நாம் குறிப்பிட்டு இருந்தோம்)

பிரசாந்த் பூஷன் ஆம் ஆத்மியில் இருப்பதன் காரணமாகத்தான் தேச விரோதிகளுக்கு ஆம் ஆத்மி அடைக்கலம் கொடுக்கும் கட்சி என்ற விமர்சனத்தை பாஜக அடிக்கடி முன்வைத்தது.

காஷ்மீர் குறித்த கருத்தை இப்போதும் பிரஷாந்த் பூசன் உறுதிபடக் கூறினார். இது கட்சியின் கருத்து அல்ல;ஆரம்பம் முதலே பிரசாந்த் பூஷனின் தனிப்பட்ட கருத்து என்று கெஜ்ரிவாலும் உடனடியாக மறுப்பும் தெரிவித்து விட்டார்.

இதன் பின்னர்தான் ஆம் ஆத்மி அலுவலகத்தை சங்பரிவார ரவுடிக் கும்பல் தாக்கியுள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் தேசத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் குருட்டு தேசபக்தி கொண்டவர்கள் ஆம் ஆத்மிக்கு போவதைத் தடுக்கலாம் என்பது தான் பாஜகவின் ஒரே நோக்கமாக இருக்க முடியும்.

கட்சிக்குச் சம்பந்தமில்லை என்று கட்சித் தலைவரே சொன்ன பின் கட்சி அலுவலகத்தை அறிவுடைய யாரும் தாக்கமாட்டார்கள்.

அடுத்ததாக பிரசாந்த் பூஷன் சொன்ன கருத்து ஆம் ஆதிமியின் கருத்தாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நியாய உணர்வு படைத்த அனைவரின் கருத்தும் அதுதான். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கருத்தும் இதுதான். இவ்வாறு கூறுவது தேச விரோதமாக ஆகாது என்பது தான் நமது கருத்தாகும்.

காஷ்மீர் வரலாறும் தேச விடுதலை வரலாறும் கொஞ்சம் தெரிந்திருக்கும் அனைத்து இந்தியர்களின் கருத்தும் இதுதான்.

இந்தியாவை ஒரு நாடாக பிரிட்டிஷார் அறிவித்தார்கள். அவ்வாறு அறிவித்த இந்தியாவில் காஷ்மீர் இருக்கவில்லை.

பாகிஸ்தான் ஒரு நாடாக அறிவித்த போது அவ்வாறு அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானிலும் காஷ்மீர் இருக்கவில்லை.

அது தனிநாடாகத்தான் விடுதலை பெற்றது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மாட்டிகொண்ட காஷ்மீரின் 33 சதவிகிதம் இன்று பாகிஸ்தானில் உள்ளது. 67 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது.

காஷ்மீர் தனது நாட்டின் பகுதி என்று இந்திய அரசு கருதினால் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரை -ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்று இந்திய அரசால் குறிப்பிடப்படும் பகுதியை – மீட்பதற்காக ஏன் பாகிஸ்தானுடன் போரிட்டு மீட்கவில்லை? நமது நாட்டின் ஒரு ஜான் நிலத்தை எந்த நாடு ஆக்ரமித்தாலும் அதை மீட்கும் கடமை அரசுக்கு இருக்கிறதா இல்லையா?

வாஜ்பேயி ஆட்சியில் இருந்தபோதாவது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீரை மீட்க ஏன் போர் செய்யவில்லை?

அதுபோல் காஷ்மீர் எங்களுக்குச் சொந்தம் என்று பாகிஸ்தான் உண்மையில் கருதினால் இந்தியாவால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்கும் கடமை அந்த நாட்டுக்கு உள்ளதல்லவா? எத்தனையோ போர்களை இந்தியாவுக்கு எதிராக நடத்திய பாகிஸ்தான் காஷ்மீர் எங்கள் நாட்டைச் சேர்ந்தது; அதைப் போரிட்டு மீட்கப் போகிறோம் என்று அறிவித்து  போர் தொடுத்து இருக்க வேண்டும்.

இரு நாடுகளுமே தங்கள் பகுதி என்று வாதிட்டாலும் ஏன் போர்ப்பிரகடனம் செய்ய முடியவில்லை? இந்தக் கேள்விக்கு உரிய விடையை அறிந்து கொண்டால் பிரசாந்த் பூஷன் கூறியது முற்றிலும் நியாயமானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

நாடு விடுதலை அடையும் போது ஆங்கிலேயர்களின் கீழ் 562 குட்டி மன்னர்கள் ஆட்சி நடந்தது. இன்றைய இந்தியாவுக்கு உள்ளேயும் பாகிஸ்தானுக்கு உள்ளேயும் அவை இருந்தன.

அந்தக் குட்டி ராஜ்ஜியங்கள் விரும்பினால் தனித்து இயங்கலாம்; அல்லது இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம் என்று ஆங்கிலேயர்கள் முடிவெடுத்து அறிவித்தனர்.

விடுதலை அடைந்த பின் தங்கள் பகுதிக்குள் குட்டி ராஜாக்கள் இருப்பதை விரும்பாத இந்தியாவும் பாகிஸ்தானும் மிரட்டியும், தொடர்ந்து மன்னர் மானியம் தருவதாக வாக்குறுதி அளித்தும் குட்டி ராஜ்ஜியங்களை தங்கள் நாட்டுடன் இணைத்தனர்.

இவ்வாறு ராஜ்ஜியத்தை இழந்த ராஜாக்களும், அவர்களின் வாரிசுகளும் கோடிக் கணக்கில் ஆண்டுதோறும் பல சலுகைகளையும் மன்னருக்கான மானியத்தையும் பெற்றுவந்தனர்.

இந்திரா காந்தியின் ஆட்சியில் மன்னர் மானிய ஒழிப்பு சட்டம் கொண்டு வந்து இதை நிறுத்தும் வரை அதிகாரமில்லாத ராஜாக்களாக முன்னால் மன்னர்கள் பவனி வந்தனர்.

இது போன்ற ஒரு பகுதியாகத் தான் இந்தியாவில் உள்ள காஷ்மீரும் பாகிஸ்தானில் உள்ள காஷ்மீரும் இருந்தன.

தங்கள் பகுதிக்குள் இருந்த ராஜாக்களிடமிருந்து அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டது போல காஷ்மீர் விவகாரத்தில் இயலவில்லை. காஷ்மீர் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடுவில் மாட்டிக்கொண்ட இருநாடுகளுமே தங்கள் கட்டுப்பாட்டில் காஷ்மீரைக் கொண்டு வர திட்டமிட்டனர்.

(இணைந்த) காஷ்மீர் மக்களில் சுமார் 90 சதம் முஸ்லிம்களாக உள்ளதால் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்பது பாகிஸ்தான் வாதம்.

காஷ்மீர் மாநிலத்தின் மன்னராக ராஜா ஹரிசிங் இருந்தார். இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இந்து மன்னர் ஆட்சி என்பதால் அதை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்பது இந்தியாவின் நியாயம்.

இது குறித்த முழு விபரங்கள் ழடெinநித.உழஅ ல் பின் வரும் இணைப்பில் தனிக்கட்டுரையாக  இடம் பெற்றுள்ளது.

மேலும் ஏன் போர் தொடரவில்லை என்றால் இது உடனடியாக ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு போகப்பட்டது.

இந்தியாவுடன் சேர்வதா?

பாகிஸ்தானுடன் சேர்வதா?

தனிநாடாக இருப்பதா?

என்று இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்  என்ற ஐநாவின் உத்தரவை இந்தியாவும் பாகிஸ்தானும் 1948 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டன. அதனால் தான் காஷ்மீருக்கான போர் நடக்கவில்லை.

இரண்டு நாடுகளுமே வாக்கெடுப்பு இல்லாமல் தத்தமது பகுதிகளை தாமே வைத்துக்கொள்ளலாம் என்று செயல்பட்டு ஐநாவின் முடிவை தொடர்ந்து மீறி வருகின்றனர்.

வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்ன பிரசாந்த் பூஷன் தேசவிரோதி என்றால் நேருவும் பட்டேலும் தான் தேச விரோதிகளாக இருக்க வேண்டும். அவர்கள் ஆட்சியின் போது காஷ்மீர் சுய நிர்ணய உரிமைக்கு ஒப்புக் கொண்டார்கள்.

மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைந்த பின் காஷ்மீரில் இப்போது காணப்படுவதை விட ஆயிரம் மடங்கு கொந்தளிப்பு ஏற்பட்டது.

இன்றைய உமர் அப்துல்லாவின் பாட்டனாரும், பாரூக் அப்துல்லாஹ்வின் தந்தையுமான காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சி காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்று கடுமையான போராட்டம் நடத்தியது.

நூறு சதவிகித மக்களும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்பவில்லை என்று உறுதிபடச் சொன்ன கால கட்டம் அது.

பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி ஷேக் அப்துல்லா தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கொடைக்கானலுக்கு கொண்டு வரப்பட்டு சிறைவைக்கப்பட்டார்.

இதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமானது..

காஷ்மீர் மக்களின் மனக்குறையை நீக்குகிறோம் என்று போராளிகளுடன் பேசி பலவிதமான முடிவுகள் எடுத்து அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அது 370ஆவது பிரிவாக அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

இந்த விபரமும் மேறகண்ட தனிக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

அந்த 370ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று இப்போது சங்பரிவாரம், நேரு மற்றும் பட்டேலின் வாக்குறுதியை மீறுகிறது. காஷ்மீர் மக்களுக்கு அளித்த உறுதி மொழிகளை ஒவ்வொன்றாக மீறியும் வருகின்றது.

370ஆவது பிரிவை நீக்கக் கூடாது என்று பிரசாந்த் பூசன் கூறுகிறார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஐநாவில் ஒப்புக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்ற ஒப்புக்கொண்டால் காஷ்மீர் பிரச்சினை ஒரு வாரத்தில் தீரக்கூடிய பிரச்சினைதான்.

இந்தியாவுடன் இருக்கமாட்டோம் என்று ஒருமித்து அவர்கள் முடிவு செய்தால் அத்தகையோர் நமது நாட்டுக்குத் தேவையில்லை.

கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதியினர் பாகிஸ்தானோடு இருக்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து முஜிபுர் ரஹ்மான் என்பவர் தலைமையில் புரட்சி செய்த போது இந்தியாவும் தலையிட்டு பங்களாதேஷ் என்ற தனி நாடாக ஆக்கியது.

பாகிஸ்தானுடன் அம்மக்களும் சேரவிரும்பவில்லை என்றால் தனிநாடாக இருப்பது சரிதான் என்று உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

காஷ்மீர் என்ற பெயரைச் சொல்லி பல ஆயிரம் கோடிகள் வீணடிக்கப்படுகின்றன. உலக அளவில் மனித உரிமை தொடர்பான பல விமர்சனங்களைச் சந்திக்கிறோம்.

உள்நாட்டு மக்களை எத்தனை ஆண்டுகள் இராணுவத்தை வைத்துக் கொண்டு ஆள்வது? என்றெல்லாம் பொறுப்போடு சிந்தித்து ஒரு முடிவு எடுப்பது நல்லது.

பிரசாந்த் பூஷன் சொன்னதும், நேருவும், பட்டேலும் ஒப்புக்கொண்டதும் பாகிஸ்தானும் ஐநாவும் ஏற்றுக்கொண்டதுமான வாக்கெடுப்பு என்ற ஒரே முடிவைத் தவிர இதற்கு நிரந்தரத் தீர்வு ஏதும் இல்லை.

http://www.tntj.net/216211.html

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்