Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

25 April 2017

துபை மண்டலம் மற்றும் லத்திஃபா மருத்துவமனை இனைந்து ”மாபெரும் இரத்ததான முகாம்” 21/04/2017 அன்று நடைப்பெற்றது.

துபை: அல்லாஹுவின் மகத்தான உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் மற்றும் லத்திஃபா மருத்துவமனை இனைந்து #மாபெரும்_இரத்ததான_முகாம்” 21/04/2017 அன்று மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி தலைமையிலும், முகாம் பொறுப்பாளர் செயலாளர் சகோ.அஷ்ரப் அலி அவர்களின் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
காலை 8.00 மணிக்கு இரத்த‌தான முகாம் ஆரம்பம் செய்யப்பட்டது. விண்ணப்ப படிவங்களை தொண்டரயினர் சுறுசுறுப்பாக புர்த்தி செய்து கொடுத்து கொண்டுயிருந்தனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வைத்துக்கொண்டு நீண்ட வரிசையாக சகோதரர்கள் நிற்றுகொண்டு இரத்ததானம் செய்ய காத்துயிருந்தன்ர்.
இதில்215 நபர்கள் கலந்து கொண்டு 179 நபர்கள் குருதி கொடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்! இதில் இந்து, கிருத்துவ சகோதரர்களும், கலந்துகொண்டு இரத்ததானம் செய்தது தனி சிறப்பு.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தொண்டரணியினர் சகோ.நவாஸ் தலைமையில் சிறப்பான முறையில் கள பணியாற்றினர்.
இதில் தேய்ரா, சோனாப்பூர், அல்கூஸ், சத்வா, ஹோர் அல் அன்ஸ், பர்துபை,கராமா,முத்தினா,ஜெபல் அலி ஆகிய பகுதியிலிருந்து கிளை சகோதரர்கள் ஏராளாமான சகோதரர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

இந்த இரத்ததான முகாமில் கலந்துக்கொண்ட மற்றும் குருதிகொடையளித்த அனைத்து சகோதரர்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.







0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்